- Home
- Tamil Nadu News
- தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி..! அவர் அழுத்தமாக பேசிய 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா!
தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி..! அவர் அழுத்தமாக பேசிய 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கையுள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் உதயநிதி வாழ்த்து சொன்னதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Udhayanidhi Stalin Dewali Wishes
சென்னை பாரிமுனையில் சென்னை கிழக்கு மாவட்டக் கழக திமுக சார்பில் பண்டிகைத் திருநாள் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் சேகர் பாபு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி
இந்த விழாவில் திமுக நிர்வாகிகள் சுமார் 2,500 பேருக்கு உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி, 'நம்பிக்கையுள்ளவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்' என்றார். தொடர்ந்து திமுக நிர்வாகிகளை பாராட்டி பேசிய உதயநிதி, பாஜகவோடு கூட்டணி சேரப் போவதாக கூறப்படும் தவெகவையும் மறைமுகமாக தாக்கினார்.
புதிய அடிமையை தேடும் பாஜக
அதாவது, ''பாஜக ஏற்கெனவே அடிமை அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. புதிய அடிமையை பாஜக வலைவீசி தேடி வருகிறது. பாஜக எத்தனை அடிமைகளை சேர்த்துக் கொண்டு வந்தாலும் சரி, திமுக தொண்டர்கள் பாஜகவை தமிழ்நாட்டில் காலுன்ற விட மாட்டார்கள்'' என்று உதயநிதி தெரிவித்தார்.
இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாத திமுக
தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட திமுக, இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. ''இதை முன்வைத்து கடவுள் மறுப்பு என்றால் இந்து கடவுள்கள் மட்டும்தானா? மற்ற மத கடவுள்கள் இல்லையா?'' என பாஜகவும், இந்து முன்னணி அமைப்புகளும் திமுகவை விமர்சித்து வருகின்றன.
உதயநிதி சொன்ன அந்த வார்த்தை
இந்த நிலையில் தான் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக இந்துக்களின் பிரதான பண்டிகையான தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் உதயநிதி. ஆனால் நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ற வார்த்தையை அவர் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டும் இதேபோல் 'நம்பிக்கையுள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்' என்று உதயநிதி கூறியிருந்தார்.
பாஜக, இந்து அமைப்பினர்கள் கேள்வி
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக உதயநிதி அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் தீபாவளி வாழ்த்துகள் சொல்லியிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகைகளுக்கு பொதுவாக வாழ்த்து சொல்லும் உதயநிதி, இந்து பண்டிகையான தீபாளிக்கு மட்டும் நம்பிக்கையுள்ளவர்களுக்கு என்ற வார்த்தையை கூடுதலாக சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? என்பதே பாஜக மற்றும் இந்து அமைப்பினர்களின் கேள்வியாக உள்ளது.