- Home
- Tamil Nadu News
- விஜய் வெறும் அட்டை.. சும்மா தட்டினாலே போதும்..! துணைமுதல்வர் உதயநிதி பரபரப்பு பேச்சு
விஜய் வெறும் அட்டை.. சும்மா தட்டினாலே போதும்..! துணைமுதல்வர் உதயநிதி பரபரப்பு பேச்சு
தற்போது அரசியலில் சிலர் அஸ்திவாரமே இல்லாமல் சிலர் உருவாகி உள்ளனர் என்று தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்ட துணைமுதல்வர் உதயநிதி அவர்களை சும்மா தட்டினாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதியை பாராட்டிய முதல்வர்
திமுக 75 அறிவுத் திருவிழா நிகழ்ச்சியில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு சட்டமன்ற உறுப்பினராக விளையாட்டுத்துறை அமைச்சராக, துணைமுதல்வராக, கழகத் தலைவர், மாண்புமிகு முதல்வரிடம் நான் பாராட்டு பெற்றுள்ளேன்.
முதல்வரின் குழந்தை தான் இளைஞரணி
அவையெல்லாம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கழக இளைஞரணி செயலாளராக என்னுடைய பணிகளை பார்த்து, அதனை அங்கீகரித்து பாராட்டும்போது அதை என்னுடைய வாழ்நாள் பெருமையாக நான் கருதுகிறேன். ஏனெனில் நம் கழக இளைஞரணி என்பது கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குழந்தை.
அறிவுத் திருவிழா Vs அடிமைத்திருவிழா
தமிழர் விரோத பாசிச கும்பலும், கொள்கையற்ற ஒரு கூட்டமும் இன்று தமிழ்நாட்டை குறைவத்துள்ளது. அதனால் தான் இந்த அறிவுத்திருவிழாவை காலத்தின் கட்டாயம் என்றேன். இதனை இளைஞர் அணியின் கடமையாக நினைத்து செய்துள்ளோம். திமுக நடத்தியதால் இது அறிவுத் திருவிழாவாக இருக்கிறது. இதே விழாவை அதிமுக நடத்தியிருந்தால் அது அடிமைத் திருவிழாவாக இருந்திருக்கும்.
வெறும் காகித அட்டை விஜய்
அரசியலில் சிலர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கின்றனர். ஊர்ல தாஜ்மகால், ஐஃபிள் டவர் செட் போட்டு EXHIBITION போட்டா கூட்டம் கூடத்தான் செய்யும் ஆனால், சும்மா தட்டினாலே போதும். அதெல்லாம் காற்றடித்தால் விழுந்திடும் வெறும் அட்டை என்று நடிகர் விஜய் தொடர்பாக மறைமுகமாக விமர்சித்தார்.