MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Holiday Special Bus: இரண்டு நாட்கள் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள்?

Holiday Special Bus: இரண்டு நாட்கள் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள்?

கோடை விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 10 2026, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு
Image Credit : our own

போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் வார விடுமுறை, தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
 சிறப்பு பேருந்துகள்
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள்

இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில்: ஜூன் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை), ஜூன் 13ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஜூன் 14ம் தேதி (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
35
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
Image Credit : our own

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 295 பேருந்துகளும், ஜூன் 13ம் தேதி (சனிக்கிழமை) 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஜூன் 12ம் வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும், ஜூன் 13ம் தேதி சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

45
மாதாவரத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம்
Image Credit : our own

மாதாவரத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம்

மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து ஜூன் 12,13ம் தேதிகளில் ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,446 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3,161 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,379 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

55
முன்பதிவு செய்jத அறிவுறுத்தல்
Image Credit : our own

முன்பதிவு செய்jத அறிவுறுத்தல்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விடுமுறை
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
Now Playing
Magalir urimai thogai: ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகை.! உங்களுக்கு கிடைக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Recommended image3
Now Playing
அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணையும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மருமகன்? அரசியலில் அதிரடி திருப்பம்
Related Stories
Recommended image1
Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved