MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Gold Medal: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு மாநில விருதுகளை அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் ஜூன் 25, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 10 2026, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு சுதந்திர தினத்தன்று முதல்வர் கைகளால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிவர்கள் விருது பெற ஜூன் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : tndipr

அதாவது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களால் மாநில விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ் காணும் விருதுகள் 15 ஆகஸ்டு 2026 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.

Related Articles

Related image1
Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?
Related image2
Love Couple: லாட்ஜில் காதலனுடன்.. கதறிய காதலி.. பதறிய 19 வயது இளைஞர்.. நடந்தது என்ன? விசாரணையில் அதிர்ச்சி!
35
Image Credit : our own

விருதின் வகை மற்றும் விவரம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.50,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்,

*மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்

45
Image Credit : our own

மேற்காணும் விருதுகளுக்கு , https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும் கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 25.6.2026க்குள் விண்ணப்பிக்கலாம். வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

55
Image Credit : Asianet News

மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 25.6.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு சுதந்திர தின விழா நிகழ்வில் முதலமைச்சர் அவர்களால் மாநில விருதுகள் வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
சென்னை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Magalir urimai thogai: ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகை.! உங்களுக்கு கிடைக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Recommended image2
Now Playing
அண்ணாமலையின் அரசியல் இயக்கத்தில் இணையும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மருமகன்? அரசியலில் அதிரடி திருப்பம்
Recommended image3
Now Playing
இனி பெண்களுக்கு பயமில்லை! களமிறங்கிய "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை"!
Related Stories
Recommended image1
Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?
Recommended image2
Love Couple: லாட்ஜில் காதலனுடன்.. கதறிய காதலி.. பதறிய 19 வயது இளைஞர்.. நடந்தது என்ன? விசாரணையில் அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved