- Home
- Tamil Nadu News
- Love Couple: லாட்ஜில் காதலனுடன்.. கதறிய காதலி.. பதறிய 19 வயது இளைஞர்.. நடந்தது என்ன? விசாரணையில் அதிர்ச்சி!
Love Couple: லாட்ஜில் காதலனுடன்.. கதறிய காதலி.. பதறிய 19 வயது இளைஞர்.. நடந்தது என்ன? விசாரணையில் அதிர்ச்சி!
Trichy News: வேலைக்கு எங்கும் செல்லாமல் தன்னுடைய காதலன் சதாம் உசேனுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்துள்ளனர்.

காதல் ஜோடி
திருச்சி அரியமங்கலம் மில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவரது மகன் சதாம் உசேன் (19). இவர் அரியமங்கலம் மலையடிவாரம் தீப் பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்த அப்துல் ஆசாத் மகள் யாஸ்மின் (18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். யாஸ்மின் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் வேலைக்காக அவ்வப்போது சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி யாஸ்மின் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். தொடர்ச்சியாக வேலை இருப்பதால் வீட்டிற்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
திருச்சியில் லாட்ஜில் ரூம்
ஆனால், அவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் தன்னுடைய காதலன் சதாம் உசேனுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்துள்ளனர். நேற்று மாலை 5 மணி அளவில் யாஸ்மினுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் காதலன் சதாம் உசேன், தன்னுடைய நண்பர் ஷேக் அப்துல்லாவை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
உயிரிழந்த இளம்பெண்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடல்நிலை மோசமாக இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இருவரும் அந்த பெண்ணை திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போதை ஊசி
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலன் சதாம் உசேன் மற்றும் சேக் அப்துல்லா இருவரையும் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தியது போது பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. யாஸ்மினுக்கு சதாம் உசேனும், அவரது நண்பர் ஷேக் அப்துல்லா வும் சேர்ந்து போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தியதும், இதில் அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக அவர் இறந்ததும் தெரியவந்தது. லாட்ஜில் யாஸ்மினுக்கு பயன்படுத்தப்பட்ட போதை மாத்திரை அட்டை மற்றும் ஊசி ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளனர்.
மாத்திரைகள் எப்படி கிடைத்தது? விசாரணையில் அதிர்ச்சி
நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கலாம் என கூறி, சதாம் உசேன் தனது காதலிக்கு போதை மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்தி உல்லாசமாக இருந்துள்ளார். அளவுக்கு அதிகமான போதை மருந்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு யாஸ்மின் திடீரென உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடத்தல் மற்றும் சந்தேக மரணம் ஆகிய பிரிவுகளின் கீழ் சதாம் உசேன் மற்றும் அவருக்கு உதவிய அரவது நண்பர் ஷேக் அப்துல்லா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைதான சதாம் உசேனுக்கு போதை ஊசி மற்றும் மாத்திரைகள் எப்படி கிடைத்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் போதை பொருட்களை விற்பனை செய்து வந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் போதை பொருட்கள் சப்ளை செய்யும் யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

