- Home
- Tamil Nadu News
- இளைஞர்களின் வாக்கு யாருக்கு? அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுக்கிறாரா விஜய்? பரபர கருத்து கணிப்பு
இளைஞர்களின் வாக்கு யாருக்கு? அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுக்கிறாரா விஜய்? பரபர கருத்து கணிப்பு
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் அரசியல் வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியம் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விஜய்க்கு அதிக ஆதரவு.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் விஜய் என்ற தனி மனிதனின் அரசியல் வருகை தான். இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை திமுக, அதிமுக பிரதான கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டு வந்தது. தற்போது விஜய் இதில் இணைந்துள்ளார்.
திமுகவை பொறுத்த வரையில் கடந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளமன்ற தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாமக, அமமுக, உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து போட்டியிட போவதாக சீமான் அறிவித்துவிட்டார்.
முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறது பொதுமக்களின் அதரவு எப்படி இருக்கும், இளைஞர்கள் வாக்கு விஜய்க்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அரசியல் விமர்சகர்கள் தமிழகத்தில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், சிலர் ரசிகர்களின் வாக்கு ஓட்டாக மாறாது என கூறிவருகின்றனர்.
இந்நிலையில், சத்தியம் டிவி சார்பில் தொகுதி வாரியாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர், முதல் தலைமுறை வாக்காளர்கள் மனநிலை எப்படி உள்ளது என்ற விவரம் இந்த சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.
முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு?
முதல் தலைமுறை வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக - 26%, அதிமுக - 18%, தவெக - 39%, நாம் தமிழர் கட்சி - 12%, மற்றவை - 5% ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகளவில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இளைய தலைமுறை
இளைய தலைமுறை எனப்படும் 18 முதல் 30 வயது வரையிலான வாக்காளர்களின் ஆதரவு யாருக்கு என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு 30% , திமுகவுக்கு 28% , அதிமுகவுக்கு 30% ஆதரவு கிடைத்துள்ளது.