- Home
- Tamil Nadu News
- விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு இல்ல! இனிமேல் தரமான சம்பவத்தை பார்க்க போறீங்க! அண்ணாமலையின் சரவெடி பேட்டி!
விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு இல்ல! இனிமேல் தரமான சம்பவத்தை பார்க்க போறீங்க! அண்ணாமலையின் சரவெடி பேட்டி!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் விமர்சனங்களை அண்ணாமலை மறுத்துள்ளார். அடுத்த ஆறு மாதங்களில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் வரும்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் குரல் மு.க.ஸ்டாலின் குரலாக மாறிவிட்டது. எப்படி இருந்த காங்கிரஸ் பேரியக்கம் இப்படி ஆகிவிட்டதே என நான் வருத்தப்படுகிறேன். தமிழகதத்தில் பல பிரச்சனைகள் இருக்கும்போது டிடிவி தினகரன், செங்கோட்டையன் பற்றி செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியிலேயே பல குழப்பங்கள் நிலவும் நிலையில் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை செல்வப்பெருந்தகை பேசுகிறார். செங்கோட்டையன் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அதிமுகவில் இபிஎஸ் போன்ற பல தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். மூழ்கும் கப்பல் போன்ற கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக கூட்டணியை மூழ்கும் கப்பல் என்கிறார். முதல்வர் உண்மையிலேயே புதிதாக தொழில் முதலீடுகளை ஈர்த்தால் வரவேற்போம், அதை வெளிப்படையாக கூற வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த ஆறு மாத காலம் அரசியலில் பல மாற்றங்கள் வரும். விஜய் போன்றவர்கள் களத்திற்கு வந்த பிறகு சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார். அந்த கூட்டணி வெற்றி பெறும் என நினைக்கிறார். அவருக்கு மற்ற கட்சியினர் மீது கரிசனை அக்கறை எததற்கு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சகோதரி அலிஷா அப்துல்லா கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் பொறுப்பு கொடுப்பார்கள். கட்சி அவரைப் பார்த்து கொண்டிருக்கிறது. மாண்புமிக்க மனிதர்களான டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.