- Home
- Tamil Nadu News
- எங்க தலைவர் விஜயை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க EPS! அதுக்கு நீங்க தகுதியான ஆளா! ரவுண்ட் கட்டும் நாஞ்சில் சம்பத்!
எங்க தலைவர் விஜயை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க EPS! அதுக்கு நீங்க தகுதியான ஆளா! ரவுண்ட் கட்டும் நாஞ்சில் சம்பத்!
தவெக தலைவர் விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்ததற்கு, எடப்பாடி பழனிசாமி விஜய்யை சிறந்த நடிகர் ஆனால் அரசியல்வாதி அல்ல என சாடினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெகவின் நாஞ்சில் சம்பத், எடப்பாடியின் நிலைப்பாடு தடுமாற்றம்.

தவெக தலைவர் விஜய் விமர்சனம்
தவெக தலைவர் விஜய் போகும் இடமெல்லாம் ஆளுங்கட்சியான திமுகவை தீய சக்தி என கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், அதிமுகவை விமர்சிக்காமல் அடக்கி வாசித்து வந்த நிலையில் அதிமுகவை ஊழல் கட்சி என கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி - விஜய்
அதாவது விஜய் சிறந்த நடிகர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்ல. சிறந்த அரசியல் கட்சி நாங்கள்தான். 1974ல் நான் அரசியலுக்கு வந்தேன். 51 ஆண்டுகளாக மக்களின் பிரச்சினையை அனுபவ ரீதியாக தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இன்று 41 உயிர்கள் போய்விட்டது. யாருக்காக உயிரிழந்தார்கள். ஆனால் அவர் என்ன செய்திருக்க வேண்டும். நேரடியாக வந்திருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் ஓடினோம். ஆனால் ஆறுதல் கூட உங்களால் சொல்ல முடியவில்லை.
கரூர் சம்பவம்
சினிமாவில் இருக்கும் வரை நன்றாக சம்பாதித்துவிட்டார். இப்போது பல கோடிகளை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றால், யாருக்காக அதை செய்கிறீர்கள். திட்டம் இல்லாமல் போனதால் தானே 41 குடும்பம் இன்று அனாதையாகிவிட்டது என குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தவெகவின் நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் பதிலடி
இதுகுறித்து தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மக்களின் தலைவர் யார் என்பது தமிழ்நாட்டிற்குத் தெரியும். மக்கள் திலகம் புரட்சித்தலைவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?
மாற்றத்தின் பெயர்தான் தடுமாற்றம்
அன்று உண்மையை உரக்கப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் —இன்று தீயசக்தி தி.மு.க-வின் திடீர் ஊதுகுழல் போலத் தான் பேசியதையே மாற்றிப் பேசும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் எத்தனை வித்தியாசங்கள்? இந்த மாற்றத்தின் பெயர்தான் 'தடுமாற்றம்.
மக்கள் தலைவர் யார்?
மக்கள் தலைவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். தெரியாதது போல நடிக்கும் உங்களுக்கும் அது தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ள ஒரே தலைவர், எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான். இதை காலம் விரைவில் புரிய வைக்கும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
