திருப்பதி, திருவண்ணாமலை செல்லும் ரயில்கள் ரத்து! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி, திருவண்ணாமலை செல்லும் ரயில்கள் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

திருப்பதி, திருவண்ணாமலை செல்லும் ரயில்கள் ரத்து! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். இதேபோல் சிறு நகரங்களுக்கு இடையே தினமும் வேலைக்கு, பள்ளி, கல்லுரிகளுக்கு சென்று வரவும் ரயில்கள் பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன.
புகழ்பெற்ற ஆன்மீக தலங்களான திருப்பதி, திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமான மக்கள் சென்று வரும் நிலையில், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி, திருவண்ணாமலை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயணிகள் மெமு ரயில்
* காட்பாடியில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்படும் காட்பாடி-திருப்பதி பயணிகள் மெமு ரயில் (வண்டி எண்: 67210) பிப்ரவரி 10, 12 மற்றும் 14ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
* பிப்ரவரி 10, 12, 14 அன்று இரவு 7.10 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படவிருந்த திருப்பதி-காட்பாடி பயணிகள் மெமு ரயில் (வ.எண்: 67209) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
* சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு திருவண்ணாமலைக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில் (வ.எண்: 56033) பிப்ரவரி 10ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு அதிக கட்டணம் ஏன்?
ரயில்கள் ரத்து
* பிப்ரவரி 11, 13, 15 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய திருவண்ணமலை-தாம்பரம் பயணிகள் ரயில் (வ.எண் 66034) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
* பிப்ரவரி 10, 12, 14, 2025 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய காட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் மெமு ரயில் (வ.எண்: 06417) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மறுமாக்கமாக பிற்பகல் 12.45 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் மெமு ரயில் (வ.எண்: 06418) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி, திருவண்ணாமலை ரயில்கள்
பகுதிவாரியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:
* பிப்ரவரி 10, 12, 14, 2025 அன்று அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் அரக்கோணம்-காட்பாடி மெமு ரயில் (வ.எண்:66057) சேவூர்-காட்பாடி இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
* இதேபோல் பிப்ரவரி 10, 12, 14, 2025 அன்று மாலை 7.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட வேண்டிய விழுப்புரம்-காட்பாடி மெமு பயணிகள் ரயில் (வ.எண்: 660256) வேலூர் கண்டோன்மென்ட் மற்றும் காட்பாடி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும்.
'வந்தே பாரத்' பயணிகளுக்கு இனி கவலையில்லை; ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!