ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு அதிக கட்டணம் ஏன்?
Train ticket booking: ஆன்லைனில் ரயில் டிக்கெட் வாங்குவது ஏன் விலை அதிகம் என்று கேள்வி எழுப்பிய எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதிக்காக கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிப்பதாகவும், இது உள்கட்டமைப்பு பராமரிப்பு செலவை ஈடுசெய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்திய ரயில்வே இந்திய பொருளாதாரத்தின் உயிர்நாடியாகவும் முதுகெலும்பாகவும் கருதப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில், ரயில் பயணிகள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கக்கூடிய வழிமுறையை அறிமுகப்படுத்தியது.
பயணிகள் தங்கள் ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி (IRCTC) வலைத்தளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதற்காக, பயனர்கள் IRCTC இல் ஒரு கணக்கை வைத்திருக்க வேண்டும். ரயில் நிலையங்களில் உள்ள பி.ஆர்.எஸ். கவுண்டர் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
பி.ஆர்.எஸ் (பயணிகள் முன்பதிவு அமைப்பு) என்பது ரயில் நிலையங்களில் அமைந்துள்ள ஒரு டிக்கெட் முன்பதிவு சாளரமாகும். இது ஒரு கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு. இது பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவ செய்யவும் ரத்து செய்யவும் உதவுகிறது. PRS கவுண்டர்கள், வார இறுதி நாட்கள் தவிர, ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இருப்பினும், வேலை நேரம் இடத்திற்கு இடம் மாறுபடும்.
இந்நிலையில், மாநிலங்களவையில் ரயில் டிக்கெட் விலை குறித்து எம்.பி. சஞ்சய் ராவத் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்வ் பதில் அளித்துள்ளார். நேரடியாக டிக்கெட் வாங்குபவர்களை விட, ஐ.ஆர்.சி.டி.சி வழியாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் வாங்குவதற்கு பயணிகள் அதிக கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த விலை வேறுபாட்டிற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐ.ஆர்.சி.டி.சி. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குகிறது. இதனால், பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முன்பதிவு கவுன்டர்களுக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. இதனால் பயண நேரம் மற்றும் போக்குவரத்து செலவுகள் மிச்சமாகும் என்று கூறினார்.
அதே நேரத்தில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளை வழங்குவதில் ஐ.ஆர்.சி.டி.சி கணிசமான செலவைச் செய்கிறது என்றும், உள்கட்டமைப்பு பராமரிப்பு செலவை ஈடுசெய்ய, கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ரயில்வே அமைச்சர் கூறினார்.
Indian Railways
இது தவிர வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கும் பரிவர்த்தனை கட்டணங்களைச் செலுத்துகிறார்கள். ஐ.ஆர்.சி.டி.சி. வழங்கும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி, பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள முயற்சிகளில் ஒன்றாகும். தற்போது முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளில் 80% க்கும் அதிகமானவை ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றன எனவும் அமைச்சர் அஸ்வின வைஷ்ணவ் கூறினார்.