- Home
- Tamil Nadu News
- பக்தர்களே திருப்பதி போற ஐடியா இருக்கா! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
பக்தர்களே திருப்பதி போற ஐடியா இருக்கா! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
திருப்பதி - காட்பாடி இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ், காட்பாடி - திருப்பதி பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம்.

தமிழகத்தில் இருந்துதான் அதிகளவில் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வருகின்றனர். பெரும்பாலும் பேருந்து சேவை இருந்தாலும் குறைந்த கட்டணம் என்பதால் அதிகளவில் பக்தர்கள் ரயில் பயணம் மூலம் திருப்பதிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம். இது குறித்து ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே ரயில்வே நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். இந்நிலையில் திருப்பதி - காட்பாடி இடையே சில ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- குண்டக்கல் பிரிவில் திருப்பதி - காட்பாடி இடையே பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் திருப்பதி - காட்பாடி இடையே சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, நாளை மற்றும் செப்டம்பர் 3, 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி - திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதாவது, காட்பாடியுடன் ரயில் நிறுத்தப்படும். பிறகு அங்கிருந்தே விழுப்புரத்திற்கு புறப்பட்டு செல்லும்.
அதேபோல், திருப்பதி - காட்பாடி பயணிகள் ரயில், காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு பயணிகள் ரயில், ஜோலார்பேட்டை - காட்பாடி மெமு பயணிகள் ரயில் ஆகியவற்றின் சேவைகளும் நாளை மற்றும் செப்டம்பர் 3, 5, 7, 8, 9 ஆகிய தேதிகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.