MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சேலத்தில் விஜய் பிரசார கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு.. பரபரப்பு! என்ன நடந்தது?

சேலத்தில் விஜய் பிரசார கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு.. பரபரப்பு! என்ன நடந்தது?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். என்ன நடந்தது? என்பது குறித்து பார்க்கலாம்

2 Min read
Author : Rayar A
Published : Feb 13 2026, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
Image Credit : Asianet News

விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 13) நடந்தது. இந்த பிரசார கூட்டத்தில் பேசிய விஜய், திமுக அரசை கடுமையாக தாக்கி பேசினார். மேலும் அதிமுகவையும் மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

அதாவது விஜய் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் (37) என்பவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சூரஜ் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வெயிலில் இருந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
தமிழக மக்கள் அதிர்ச்சி
Image Credit : X

தமிழக மக்கள் அதிர்ச்சி

விஜய் பங்கேற்ற கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நெஞ்சை உருக்கும் சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜய் கூட்டத்தில் இப்போது ஒருவர் மயங்கி விழுந்து ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் இரங்கல்

விஜய் கூட்டத்தில் உயிரிழந்த சூரஜின் குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''சேலத்தில் இன்று (13.02.2026) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் சூரஜ் என்ற சகோதரர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்.

இளம் வயதில், பொதுநிகழ்வில் பங்கேற்ற ஒருவரின் உயிர் இவ்வாறு பறிபோனது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. அவரது மறைவு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். உயிரிழந்த சூரஜ் சகோதரரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Related Articles

Related image1
என்னைபோல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி இருக்கா? ஸ்டாலின், இபிஎஸ்க்கு விஜய் சவால்!
Related image2
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே.. ஸ்டாலினை வறுத்தெடுத்த விஜய்

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
tvk நெரிசல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamil Nadu Bypolls: 5 தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் ட்விஸ்ட்... சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
Recommended image2
Now Playing
தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
Recommended image3
Now Playing
தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
Related Stories
Recommended image1
என்னைபோல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க திராணி இருக்கா? ஸ்டாலின், இபிஎஸ்க்கு விஜய் சவால்!
Recommended image2
பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே.. ஸ்டாலினை வறுத்தெடுத்த விஜய்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved