- Home
- Tamil Nadu News
- இன்றைய TOP 10 செய்திகள்: மோடியைக் காப்பாற்றிய தீர்ப்பு முதல் ஏலியன்கள் கொடுத்த சிக்னல் வரை!
இன்றைய TOP 10 செய்திகள்: மோடியைக் காப்பாற்றிய தீர்ப்பு முதல் ஏலியன்கள் கொடுத்த சிக்னல் வரை!
குழந்தையின் மூச்சுக்குழாயில் புகுந்த வண்டு, மோடியின் பட்டப்படிப்பு தகவல் வெளியீடு ரத்து, சி.பி.எம். தலைவர் பெ. சண்முகத்தின் அறிவிப்பு என பல செய்திகள் இன்றைய TOP 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மோடியின் பிரைவசியை காப்பாற்றிய நீதிமன்றம்
பிரதமர் மோடியின் இளங்கலை பட்டப்படிப்பு தகவல்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தனிநபர் அந்தரங்க உரிமையை மீறக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொடிக் கம்பங்கள் குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
தமிழகத்தின் பொது இடங்களில் கட்சிக் கொடிகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் வைக்கப்படுவது போக்குவரத்து தடையையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகக் கருதி பொது இடங்களில் அரசியல் கட்சியல் கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது.
வானிலை: அடுத்த 48 மணி நேரத்தில்
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது.
குழந்தையின் மூச்சுக்குழாயில் புகுந்த வண்டு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை வண்டு கடித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரையில் கிடந்த வண்டை விழுங்கியதால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நல்லகண்ணு உடல்நிலை
நேர்மையான அரசியல் தலைவரான ஐயா நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்டேட் கொடுத்துள்ளது.
நல்லகண்ணு (100) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்.
மோடி சிறைக்குச் சென்றால்...
நாடாளுமன்றத்தில் பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியை நீக்கும் மசோதா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
சாதி மறுப்பு திருமணங்களுக்கு சி.பி.எம். ஆதரவு
சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆசிரியர்கள்
இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 5 அன்று குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார்.
கரூரில் நாள் குறித்த திமுக
நாலாவது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து விட்டார். கோயம்புத்தூர் சென்றார், நாமக்கல் சென்றார், ஈரோடு சென்றார், திண்டுக்கல், திருச்சி வரை சென்றுவிட்டார். ஆனால் கரூருக்கு போகவில்லை. காரணம், செந்தில் பாலாஜியின் பயம்.
RBFLOAT: ஏலியன்களின் சிக்னல்!
விண்வெளியில் இருந்து வரும் மர்மமான மற்றும் சக்திவாய்ந்த ரேடியோ அலைகள், "அதிவேக ரேடியோ வெடிப்புகள்" (FRB) என அழைக்கப்படுகின்றன. சமீபத்தில் கண்டறியப்பட்ட மிகப் பிரகாசமான அதிவேக ரேடியோ வெடிப்புக்கு RBFLOAT என்று பெயரிடப்பட்டுள்ளது.