நாளை பள்ளிகள் முழு நேரம் செயல்படும்! எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
தமிழகத்தில் பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
Cyclone Fengal
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. அதுமட்டுமல்லாமல் ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திற்கு டிசம்பர் 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Holidays
இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 4ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை எந்தெந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும் என்பதை பார்ப்போம்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு குட்நியூஸ்! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
School Working Day
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வெள்ளிக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி, பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
School Student
அதேபோல் இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும். செவ்வாய்கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ்! அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!
Saturday School Working Day
மேலும் தூத்துக்குடி திருவண்ணாமலை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி முழு வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.