MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் இவ்வளவா.!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுக்கும் விலை

ஒரு கிலோ தக்காளி, வெங்காயம் இவ்வளவா.!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுக்கும் விலை

தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சமீபத்தில் குறைந்திருந்த நிலையில், தென்மேற்குப் பருவமழையால் வரத்துப் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jun 13 2025, 07:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சமையலும் காய்கறிகளும்
Image Credit : our own

சமையலும் காய்கறிகளும்

காய்கறிகள் தான் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் பெரும்பலான வீடுகளில் காய்கறிகள் இல்லாமல் சமையல் இருக்காது. ரசம் முதல் பிரியாணி சமைப்பதாக இருந்தாலும் காய்கறிகளின் பங்கு முக்கியமானது. அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை தான் அதிகம். 

எனவே காய்கறி சந்தையில் இல்லதரசிகள் எது வாங்குகிறார்களோ இல்லையோ தக்காளி, வெங்காயத்தை கட்டாயம் வாங்குவார்கள். அந்த அளவிற்கு அதன் தேவை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மற்ற காய்கறிகளை விட இதன் விலை அதிகரித்தால் இல்லத்தரசிகளின் நிலைமை அவ்வளவு தான்.

25
உச்சத்தை தொட்ட காய்கறி விலை
Image Credit : our own

உச்சத்தை தொட்ட காய்கறி விலை

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. போட்டி போட்டு விலை அதிகரித்தது. ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையானது. எனவே நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டது. 

இதன் காரணமாக பை நிறைய பல கிலோ கணக்கில் தக்காளி, வெங்காயத்தை வாங்கி சென்றவர்கள் குறைவான அளவே வாங்கி செல்லும் நிலை உருவானது. எனவே எப்போது விலை குறையும் என காத்திருந்த நிலையில் அதற்கு ஏற்றார் போல் தக்காளி, வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது.

Related Articles

Related image1
முளைவிட்ட பின் சாப்பிடக் கூடாத 3 காய்கறிகள்!! உஷார் மக்களே!!
Related image2
விவசாயிகளுக்கு குஷி.! நெல் கொள்முதல் விலை இவ்வளவா.? ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
35
குறைந்தது தக்காளி, வெங்காயம் விலை
Image Credit : our own

குறைந்தது தக்காளி, வெங்காயம் விலை

இதனால் காய்கறி சந்தையில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளியும் வந்திறங்கியது. ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு தக்காளியும், வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கிலோ கணக்கில் அள்ளிச்சென்றனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் மீண்டும் வரத்து பாதிக்கப்பட்டு விலையானது உயரத்தொடங்கியுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு குறைந்த அளவே தக்காளி மற்றும் வெங்காயம் வந்துள்ளதால் இன்று விலையானது சற்று அதிகரித்துள்ளது.

45
காய்கறி விலை என்ன.?
Image Credit : our own

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைக்காய் ஒன்று 10 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

55
உயர்ந்து வரும் காய்கறி விலை
Image Credit : Google

உயர்ந்து வரும் காய்கறி விலை

சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,

 முருங்கைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீன்ஸ் உருகிப்போ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும். முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தக்காளி
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தக்காளி விலை
வெங்காயம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Recommended image3
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Related Stories
Recommended image1
முளைவிட்ட பின் சாப்பிடக் கூடாத 3 காய்கறிகள்!! உஷார் மக்களே!!
Recommended image2
விவசாயிகளுக்கு குஷி.! நெல் கொள்முதல் விலை இவ்வளவா.? ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved