முளைவிட்ட பின் சாப்பிடக் கூடாத 3 காய்கறிகள்!! உஷார் மக்களே!!
முளைவிட்ட பின் சாப்பிடக் கூடாத மூன்று காய்கறிகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
முளைகட்டிய பயிர்வகைகள் ஆரோக்கியமானது. பச்சைப் பயிறு, கொண்டக் கடலை போன்றவை முளைகட்டிய பின் சாப்பிட்டால் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக கிடைக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை செரிந்து காணப்படும். அதுமட்டுமின்றி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை தூண்டும். இவற்றில் குறைந்த கலோரிகள் தான் காணப்படும். ஆனால் புரதச்சத்து அதிகமாக இருக்கும்.
எடையை குறைக்க நினைப்பவர்கள் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லா முளைக்கட்டிய உணவுகளும் உடலுக்கு ஆரோக்கியமானது எனக் கூறி விட முடியாது. சில காய்கறிகளில் முளைவிட்டால் அவற்றை நாம் தவிர்ப்பது மட்டுமே உடல் நலத்திற்கு நன்மை தரும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சீக்கிரம் கெடாத உணவு. ஆனால் நாள் ஆக ஆக முளைத்துவிடும். முளைவிட்ட உருளைக்கிழங்கை உண்பது நல்லதல்ல. அவற்றில் கிளைகோல்கலாய்டுகள் இருக்கும். அதை உண்பதால் சோலோ பாய்சன் போன்றது. குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும். சில நேரங்களில் நரம்பியல் பிரச்சினைகள் கூட ஏற்படலாம்.
வெங்காயம்
வெங்காயம் நிறைய வாங்கி வைக்கும்போது அதில் முளைவிட தொடங்கும். முளைக்கட்டிய வெங்காயத்தில் ஆல்கலாய்டுகள் அதிகமாக உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது. அதிலும் என் புரோபைல் டை சல்பைடை உற்பத்தியாவதால் இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்தக் கூடும். இதனால் இரத்த சோகை வர வாய்ப்புள்ளது. குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம்.
பூண்டு
முளைக்கட்டிய பூண்டுகளை ஒருபோதும் உண்ணக் கூடாது. வெங்காயத்தில் இருப்பது போல பூண்டிலும் அதிகளவு சல்பர் இருக்கும். இவை ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்வதால் இரைப்பை குடல் பாதிப்பு வரலாம். இரத்த சிவப்பணுக்களையும் பாதித்துவிடும்.