- Home
- Tamil Nadu News
- அட கடவுளே! இன்றைக்குனு பார்த்து தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணிநேரம்?
அட கடவுளே! இன்றைக்குனு பார்த்து தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணிநேரம்?
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின்வாரியம்
தமிழகத்தில் மின்தேவை என்பது தற்போதை காலக்கட்டத்தில் இன்றியாமையாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.
கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஈரோடு மாவட்டம்
கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது.
விழுப்புரம் மாவட்டம்
தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மானந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், அன்னமங்கலம், நீலம்பூண்டி செந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண் பிள்ளை பெற்றாள், சே.பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி மாலை 4 வரை மின்தடை செய்யப்படும்.
திருச்சி மாவட்டம்
துவரங்குறிச்சி டவுன், பஞ்சாயத்து, செவந்தம் பட்டி, சதலம் பட்டி, அதிகாரம், ஆலம் பட்டி, தேத்தூர், டி.சிலம் பட்டி, அம்மன் என்ஜிஆர், ஆண்டாள் எஸ்டி, ஆசாத் என்ஜிஆர், டெவிட் க்ளினி, தேவராய நகர், காந்தி நகர், கணேஷ் நகர், ஐபி சில்னி, கிருஷ்ண மூர்த்தி என்ஜிஆர் (என்) எக்ஸ்டிஎன், எல்ஐசி க்ளினி, காந்த்மங்கம் எஸ்டி, நேதாஜி எஸ்டி,, நேதாஜி தெரு, பட்டேல் தெரு, பிரசா உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை ஏற்படும்.
திருவாரூர் மாவட்டம்
மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர், குமாரமங்கலம், பில்லூர், மாங்குடி, தேவூர், மடப்புரம், ராஜா தெரு, புதுத்தெரு, துர்காலயா ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை.
குன்றத்தூர்
நடைபாதை தெரு, தட்சர் தெரு, கன்னியப்பன் நகர், பொன்னியம்மன் நகர், திருவள்ளுவர் தெரு, சின்ன தெரு, பெரிய தெரு, நவீதர் தெரு, துரைசாமி முதலியார் தெரு, லட்சுமி நகர், மோகன்லிங்கா நகர்.
திருவேற்காடு
கூட்டுறவு நகர், கஜேந்திரன் தெரு, மாதிராவேடு, காவேரி நகர், வேலப்பஞ்சாவடி பி.எச்.ரோடு.
ஜே.ஜே.நகர்
அம்பேத்கர் நகர், 17 மற்றும் 18வது குறுக்குத் தெரு, 9வது மெயின் ரோடு, எஸ்பிஐஓஏ பள்ளி 6வது மெயின் ரோடு, எரி ஸ்கீம் 2வது மெயின் ரோடு, வினோத் அபார்ட்மெண்ட்ஸ், கங்கையம்மன் நகர், கேஜிஒய்எஸ்எஸ் அபூர்வா அபார்ட்மென்ட், கோல்டன் ஹோம்ஸ், ஜெம்ஸ் பார்க்.
ஆவடி
திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்புழில் நகர், கன்னடபாளையம், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.
தாம்பரம்
பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, வி.ஜி.என்., நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் ரோடு இரும்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.