சென்னையில் எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை? மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இதனால் கொஞ்ச நேரம் கூட ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. மின் தேவையும் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்று சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
தாம்பரம்
சேலையூர் கற்பகம் நகர், ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், பரத் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், பாரத் மருத்துவக் கல்லூரி, அகரம் மெயின் ரோடு ஒரு பகுதி.
பல்லாவரம்
எஸ்பிஐ காலனி, புருசோத்தமன் நகர் பகுதி, கஜலட்சுமி நகர், கஜபதி நகர், என்எஸ்ஆர் சாலை, கமலா தெரு, எம்ஜிஆர் தெரு, பச்சப்பா நகர், குமரன் குன்றம் பகுதி.
போரூர்
குன்றத்தூர் கோவில் அலை, குமரன் நகர், பிகேவி மகா நகர், ஆர்.பி.தர்மலிங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.