குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு! இன்றுடன் கடைசி! வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3935 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றுடன் கடைசி நாள்.

குரூப் 4 தேர்வு
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தேர்வு எழுத முடியும் என்பதால் அரசு வேலை எப்படியாவது கிடைத்துவிடாத என ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 25 முதல் மே 24ம் தேதி (அதாவது இன்று) வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
வயது வரம்பு
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் 42 வயது வரையும், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 21 முதல் 37 வயது வரையும், இதர பதவிகளுக்கு 18 முதல் 34 வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது.
குரூப்-4 விண்ணப்பிக்கும் முறை
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் இணையதளம் வழியாக ஒன் - டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்து முடித்த பிறகு, தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
குரூப்-4 தேர்வு எப்போது?
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குரூப்-4 தேர்வானது வரும் ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெறுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை
குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து சான்றிதழ் பதிவேற்றம், நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.