- Home
- Tamil Nadu News
- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு! முதன்மைத் தேர்வு எப்போது?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு! முதன்மைத் தேர்வு எப்போது?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 1 மற்றும் 1ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத் துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளில் 72 காலிப்பணியிடங்களான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதினர். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வரும் டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்காக தேர்வர்கள் தயாராகும் படி டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.