- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் நாளை 'இந்த' 3 மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு! மாணவர்கள் குஷி!
தமிழகத்தில் நாளை 'இந்த' 3 மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு! மாணவர்கள் குஷி!
Schools Holiday: கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் இன்றும் விட்டு விட்டு பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை (டிசம்பர் 3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் அறிவித்துள்ளார்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் குஷியடைந்துள்ளனர்.
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
