- Home
- Tamil Nadu News
- துணை முதல்வர் பதவி, கூடுதல் சீட் தாரேனு ஆசை காட்டுறாங்க.! எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த திருமா
துணை முதல்வர் பதவி, கூடுதல் சீட் தாரேனு ஆசை காட்டுறாங்க.! எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த திருமா
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு குறித்து திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தொகுதியில் கள நிலவரத்தை ஆராய்ந்து வருகிறது. அதே நேரம் கூட்டணியை பலப்படுத்த பல்வேறு கட்சிகளிடம் ரகசிய பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் திமுகவின் கூட்டணி கட்சிகளை தங்கள் அணிக்கு வர அதிமுகவும், தவெகவும் தூது விட்டு வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் திருமாவளவன்.
பா.ஜ.க வை கூடவே வைத்து கொண்டு யாரை காப்பாற்ற போகிறார்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பெருந்திரள் பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், பா.ஜ.க வை கூடவே வைத்து கொண்டு மக்களை காப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றார். யாரை காப்பாற்ற போகின்றார் எடப்பாடி பழனிசாமி என கேள்வி எழுப்பினார்.
கூடுதல் சீட் கொடுத்தால் திருமா வந்து வடுவார் என நினைப்பது தவறு, பரிட்சைக்கு பயந்து ஒரு வருடத்திற்கு முன்பாகவே பயந்து படிப்பவர்கள் அல்ல நாங்கள், அன்றைய பரீட்சைக்கு அன்றுதான் படிப்போம். ஆனால் இன்று எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே பரிட்சைக்கு தயாராகி பிரச்சாரத்திற்க்கு புறப்பட்டு விட்டார். தற்போது ஒரு ரிவிஷன் முடித்துவிட்டார். பின்னர் மீண்டும் அடுத்த ரவுண்டு வரப்போகிறார்.
பா.ஜ.க ஒரு மிகச்சிறந்த தீயசக்தி
சட்டமன்றத் தேர்தல் அறிவித்த பின்பு தான் தேர்தல் வேலைகளை செய்வோம். எங்களுக்கு தேர்தல் முதன்மையானது கிடையாது. அது இரண்டாவது தான். மதச்சார்பின்மையை பின்பற்றுவது திமுக, காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் தான் அதனால் அங்கு உள்ளோம். சில கட்சிகள் இன்னும் கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை. ஏன் முடிவு எடுக்கவில்லை என்றால், லாப நட்ட கணக்குகளை பார்த்துவிட்டு லாபம் எந்த பக்கமும் அந்த பக்கம் சென்று விடுவார்கள்.
ஆனால் விசிக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முடிவெடுத்து விட்டோம். நாங்கள் லாபமோ நஷ்டமோ பார்ப்பதில்லை மதச்சார்பின்மை கொள்கை தான் எங்களுக்கு முக்கியம். பா.ஜ.க ஒரு மிகச்சிறந்த தீயசக்தி அவர்கள் எங்களை பார்த்து சொல்கின்றார்கள் தீச சக்திகள் என்று, தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பா.ஜ.க வைத்துள்ளது.
திமுக கூட்டணியை உடைக்கவே விசிகவிற்கு அழைப்பு
பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் தமிழத்தில் வளர்ந்து விட்டால் இந்து முஸ்லீம் கலவரத்தை தூண்டுவார்கள். அனைத்து மாநிலத்திலும் இதை தான் பா.ஜ.க செய்து வருகின்றது. திமுக கூட்டணியை உடைக்கவே விசிகவை கூட்டணிக்கு அழைக்கின்றார் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பதவி தருகிறோம், கூடுதல் சீட்டு தருகிறோம் என கூறி வருகின்றனர். யாரோ ஒருவர் சொல்லி கொடுத்து தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைக்கின்றார்.
பாஜகவிற்கு அதிமுக சிவப்பு கம்பள வரவேற்பு
இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து அதிமுக எப்படி ஆட்சி அமைக்கும், நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக வாக்குகள் பா.ஜ.க.விற்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரை திமுக அல்லது அதிமுக மட்டுமே தான், பா.ஜ.க மெல்ல மெல்ல கால் உன்ற நினைக்கின்றது அதற்க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடபாடி பழனிசாமி சிவப்பு கம்பளம் விரித்து அழைப்பு விடுத்திருக்கிறார் என திருமாவளவன் தெரிவித்தார்.