MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம்! விண்ணைத்தொட்ட அரோகரா கோஷம்!

திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம்! விண்ணைத்தொட்ட அரோகரா கோஷம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீர் தரிசனம் செய்து, தமிழ் மந்திரங்களுடன் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 07 2025, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்
Image Credit : Asianet News

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாக விளங்குகிறது. நூற்றாண்டுகளாக தமிழ் பக்தர்களின் ஆன்மீக ஈர்ப்பை தக்கவைத்திருக்கின்ற இத்தலத்தில், ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. புணிதநீர் தரிசனம் மற்றும் கும்பாபிஷேக தருணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோஷம் எழுப்பி முழங்கினர்.

25
அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
Image Credit : Asianet News

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வாரம் முழுவதும் யாகசாலை பூஜைகள், மந்திரோச்சாடனங்கள் நடைபெற்றன. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. குடமுழுக்கு நிகழ்வின் போது புனிதநீர் ராஜகோபுரத்தின் மீது ஊற்றப்பட்டது. அதே நேரத்தில் ட்ரோன்களின் உதவியுடன் கோயிலின் வளாகம் முழுவதும் திரட்டிய புனிதநீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் “அரோகரா அரோகரா” என உரக்க முழங்கி, “வெற்றிவேல் வீரவேல்” எனக் கைகொட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Articles

Related image1
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்! ஜூலை 4 முதல் 8 வரை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
Related image2
பரிகாரம் செய்ய ஆலயம் செல்லும் போது.....இதை கட்டாயம் செய்ய கூடாதாம்..!
35
முருகனை மகிழ்வித்த தமிழ் மந்திரங்கள்
Image Credit : Asianet News

முருகனை மகிழ்வித்த தமிழ் மந்திரங்கள்

சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த ஆண்டின் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழ் மந்திரங்களோடும் நடத்தப்பட்டது. இதற்கு பெரிய வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. இதன்மூலம், தமிழில் பக்தியையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் பரப்ப வேண்டிய முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

45
முருகன் அருள்பெற படையெடுத்த பக்தர்கள்
Image Credit : Asianet News

முருகன் அருள்பெற படையெடுத்த பக்தர்கள்

பாதுகாப்பு நடவடிக்கையாக 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். எமர்ஜென்சி மருத்துவ குழுக்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. பக்தர்கள் இடைவிடாது அலைமோதியதால், கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறை அமைச்சகமும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டனர்.

55
கோவில்களில் குடும்பத்துடன் கூடிய பக்தர்கள்
Image Credit : Asianet News

கோவில்களில் குடும்பத்துடன் கூடிய பக்தர்கள்

ராஜகோபுரம், மற்ற கோபுரங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருந்தது. வண்ண விளக்குகள், பூச்சோலை அலங்காரங்கள், பழங்கள், மஞ்சள்-குங்குமக் கப்புகள் என பக்திப் பரவசம் பொங்கியது. இன்று முழுவதும் முருகன் பாட்டுக்கள், பன்னிரு திருமுறை பாடல்கள் ஒலிபரப்பானது. இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. வெளிநாட்டுப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தனர். முருகப்பெருமானின் அருளைப் பெற தங்களது நேரத்தையும் சக்தியையும் செலுத்தி பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மிகுந்த பக்தி உணர்வோடு நடந்த இந்த கும்பாபிஷேகம், தமிழர் ஆன்மிக மரபின் பெருமையை மீண்டும் ஒளிர வைத்தது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மிகவும் ஆபத்தானவர் உதயநிதி.. கொள்கையில் உறுதியுடன் இறங்கி அடிக்கிறார்.. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
Recommended image2
சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது.. அமித் ஷாவுக்கு சவால் விட்ட ஸ்டாலின்
Recommended image3
என்ஜின் இல்லாத கார் அதிமுக.. எவ்ளோ தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது.. பழனிசாமியை புரட்டி எடுத்த உதயநிதி!!
Related Stories
Recommended image1
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்! ஜூலை 4 முதல் 8 வரை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
Recommended image2
பரிகாரம் செய்ய ஆலயம் செல்லும் போது.....இதை கட்டாயம் செய்ய கூடாதாம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved