ஆலயங்களுக்கு செல்லும் போது சில குறிப்பிட்ட விஷயத்தை நாம் பின்பற்ற வேண்டும்...

குறிப்பாக பரிகாரம் செய்ய கோவிலுக்கு செல்லும் போது கட்டாயம் சில வற்றை பின்பற்ற வேண்டியதை பார்க்கலாம்

ஆலயத்திற்கு செல்லும் போது கை கால்களை கழுவிவிட்டு தான் உள் நுழைய வேண்டும்....தலையில் தண்ணீர் தெளிக்கக் கூடாது

பரிகாரம் செய்ய செல்வோர் முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது

பரிகார ஸ்தலத்திற்கு போகும் போதோ அல்லது வரும் போதோ எந்த ஸ்தலத்திற்கு செல்ல கூடாது

குடும்பத்தோட செல்வது  நல்லது....ஆனால் அதிக நாளாக சொல்லிக்கொண்டே போகாமல் இருக்க கூடாது

ஸ்தலத்திற்கு புறப்படும் முன்பான 24 மணி நேரத்திற்கு முன்பாக இருந்தே அசைவ உணவை சாப்பிட கூடாது மற்றும் தம்பதிகளும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும்

போகும்போதும் வரும் போதும் யாருக்கும் பிச்சை போட கூடாது

யாரிடமும் கடன் வாங்கி அந்த பணத்தில் கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்...அப்படியே வாங்கினாலும் பூஜைக்காக பணம் தேவைப்படுகிறது என சொல்லக்கூடாது