- Home
- Tamil Nadu News
- Ration Shop : இனி ரேஷன்கடைக்கு அலைய வேண்டிய தேவை இல்லை.! ஜூலை 1 முதல் தேதி குறித்த அரசு
Ration Shop : இனி ரேஷன்கடைக்கு அலைய வேண்டிய தேவை இல்லை.! ஜூலை 1 முதல் தேதி குறித்த அரசு
தமிழகத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் ஜூலை 1 முதல் 10 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்படவுள்ளது. சென்னை, ராணிப்பேட்டை உட்பட 10 மாவட்டங்களில் முதல் கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழக மக்களுக்கு உதவிடும் ரேஷன் பொருட்கள்
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது சுமார் 2.25 கோடி குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை மூலம் 6.92 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் ரேஷன் அட்டைகள் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை அட்டையானது வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. பிங்க் அட்டை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது. பச்சை அட்டையானது அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்களுக்கு, மிக உயர்ந்த மானியங்களுடன் உணவுப்பொருட்கள் வங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் கோதுமை அட்டை, பொருட்கள் இல்லாத அட்டை என வகைப்படுத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள்
தமிழ்நாட்டில் 34,773 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தக் கடைகள் மாநிலம் முழுவதும் அனைத்து தகுதியான அட்டைதாரர்களுக்கும் அரசி, கோதுமை, சக்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில், குறிப்பாக ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கி, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்த நிலையில் ரேஷன்கடைகளுக்கு சென்று பொருட்களை மக்கள் வாங்கி வரும் நிலையில் வீடு தேடி உணவுப்பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த பல கட்டங்களாக ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது முதல் கட்டமாக சென்னை உட்பட 10 மா வட்டங்களில், ஜூலை 1ம் தேதி முதல் சோதனை ரீதியாக துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
குறிப்பாக மூத்த குடிமக்கள், ஆதரவு இல்லாதோர், நடக்க முடியாத நிலையில் உள்ள மக்கள் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. உணவுப்பொருட்களை வாங்க மற்ற நபர்களின் உதவியை நாடி வருகின்றனர். இதனால் வயது மூத்த மக்களுக்கு முதல் கட்டமாக உதவிடும் வகையில், வீடுகளுக்கே தேடிச்சென்று உணவுப்பொருட்களை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் சோதனை அடைப்படையில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ளது. அந்த வகையில் சென்னை, ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் துவங்க உள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
அந்த வகையில் உணவு பொருட்களை லாரி அல்லது சிறிய வகை வாகனங்களில் கொண்டு சென்று 70 வயதுக்கு மேற்பட்ட வயது மூத்தோர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அப்போது விற்பனை முனைய கருவி, விழிரேகை கருவியை எடுத்துச் சென்று ஆதா,ங்களை சரிபார்த்து மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சோதனை முறையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.