- Home
- Tamil Nadu News
- குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்!
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடல்!
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடைபெறும் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தின் போது, சாதனை விவசாயிகளுக்கு விருது வழங்குவதுடன், பி.எம். கிசான் திட்டத்தின் தவணையையும் விடுவிக்கிறார்.

பிரதமர் மோடி கோவை வருகை
பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்ற கையோடு பிரதமர் மோடியின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. அதாவது கோவை கொடிசியாவில் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
10 விவசாயிகளுக்கு விருது
இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்துள்ள 10 விவசாயிகளுக்குப் பிரதமர் மோடி விருது வழங்கவுள்ளார். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் 9 கோடி விவசாயிகளுக்கு 21ம் தவணையை விடுக்க உள்ளார். பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டிரோன்கள் பறக்க தடை
கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக விவசாயிகள் நடத்தும் மாநாடு என்பதால் மாநில முதல்வர்கள் உட்பட யாருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார்.
டாஸ்மாக் கடைகள் மூடல்
இந்நிலையில் பிரதமர் மோடியின் கோவை வருகையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியா, பீளமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 15 டாஸ்மாக் கடைகள், 5 பார்கள், 1 18 (FL 2) உயர்தர பார்களை மூட கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

