- Home
- குற்றம்
- திருமணமான 72 நாட்களில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்! கணவர் அதிர்ச்சி! இறுதியில் எதிர்பாராத ட்விஸ்ட்!
திருமணமான 72 நாட்களில் புதுப்பெண் 8 மாத கர்ப்பம்! கணவர் அதிர்ச்சி! இறுதியில் எதிர்பாராத ட்விஸ்ட்!
கடலூரில் திருமணமான புதுப்பெண் வயிற்று வலியால் மருத்துவமனைக்குச் சென்றபோது 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த கர்ப்பத்திற்கு அவரது தாய்மாமன் லிங்கமுத்துவே காரணம் என்பது விசாரணையில் அம்பலமானது.

புதுப்பெண்
கடலூர் மாவட்டம் வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 4ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் வைலாமூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.
புதுப்பெண் 8 மாதம் கர்ப்பம்
இந்நிலையில் புதுப்பெண் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவரின் குடும்பத்தார் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது புதுப்பெண்ணை பரிசோதித்த போது புதுப்பெண் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து கணவர் அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தார்.
அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு
குறித்து பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து வைலாமூருக்கு வந்த பெண்ணின் பெற்றோர், கர்ப்பத்துக்கான காரணம் யார் என்று கேட்டுள்ளனர். கர்ப்பத்துக்கு காரணமானவர் அம்மாவின் உடன்பிறந்த தம்பி லிங்கமுத்து(32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து புதுப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாய்மாமன் லிங்கமுத்து மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் பெண்ணின் தாய்மாமனான லிங்கமுத்துவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என்பதால் தன்னுடைய அக்காவின் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.
கைதாகாத தாய் மாமன்
அப்போது அக்காவின் மகள் என்று கூட பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வலிப்பினால் ஏற்பட்ட விபத்து என்று முதலில் சொல்லி சமாளித்துள்ளார். பின்னர் ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் புதுப்பெண் கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. ஆனால் லிங்கமுத்துவை இந்த வழக்கில் போலீசார் கைது செய்யவில்லை. அதற்கான காரணம் லிங்கமுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நெய்வேலி பகுதியில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோமாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

