MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முதல்வரே பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்தலனா! நாங்கள் யாருன்னு காட்டுவோம்! ஜாக்டோ-ஜியோ!

முதல்வரே பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்தலனா! நாங்கள் யாருன்னு காட்டுவோம்! ஜாக்டோ-ஜியோ!

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்திய அவர்கள், அரசு செவிசாய்க்காவிட்டால் நிரந்தர வேலைநிறுத்தம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 18 2025, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

திமுக தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்திய திட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் முதல்வரின் கவனத்து கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினரும் ஆசிரியர் மற்றும் பணியாளர் அமைப்பினரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

25
Image Credit : our own

இதில் முக்கிய அம்ச கோரிக்கைகளாக அரசு பல்வேறு துறையில் 30 சதவீதத்திற்கும் மேல் காலியாக உள்ள பணியாளர்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகைகளை அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்கள் உடனடியாக வழங்க வேண்டும். குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் போன்ற பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

Related Articles

Related image1
என் சாவுக்கு இவங்க இரண்டு பேரு தான் காரணம்! மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி டிஜிபிக்கு பகீர் கடிதம்
Related image2
அடுத்த 5 நாட்கள்! தமிழ்நாட்டை நோக்கி வரும் பேராபத்து? சென்னையில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! வெதர்மேன் அப்டேட்
35
Image Credit : our own

இதைக் குறித்து செய்தியாளரிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன்: அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற போராட்டங்களில் தற்போதைய முதலமைச்சர் கலந்து கொண்டு, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்” என்று கூறினார். ஆனால் ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலம் கடந்த பிறகும், பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

45
Image Credit : our own

காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்ற வாக்குறுதி நிறைவேறவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி, செவிலியர்கள், நூலகர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளின் சிறப்பு ஊதியமும் மதிப்பூதியமும் வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல அரசாணைகள் இன்னும் திரும்ப பெறப்படவில்லை. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஓய்வூதியத்திற்காக 10% பிடித்தம் செய்யப்பட்டதையும், அதிமுக–திமுக மாறி மாறி ஆட்சி செய்த 23 ஆண்டுகளிலும் அந்த தொகை திருப்பி வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். பிடித்தம் செய்யப்பட்ட 84,000 கோடி ரூ.42,000 கோடி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட வேண்டும். மீதமுள்ள 42,000 கோடி எல்ஐசி கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

55
Image Credit : our own

இதன்மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியும். “எங்களது நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக தீர்க்க வேண்டும்; இல்லையெனில் ஜாக்டோ–ஜியோ மாபெரும் குழுவை அமைத்து அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை அறிவிப்போம் என்று பாஸ்கரன் எச்சரித்தார். வரும் 21ஆம் தேதி மாநில ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் அந்த காலத்திற்குள் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்தால் கூட்டத்தில் நிரந்தர வேலை நிறுத்தம் போன்ற கடுமையான போராட்டங்களில் ஈடுபட முடிவு எடுக்கப்படும் என ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
அரசு ஊழியர்கள்
ஆசிரியர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image2
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image3
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Related Stories
Recommended image1
என் சாவுக்கு இவங்க இரண்டு பேரு தான் காரணம்! மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி டிஜிபிக்கு பகீர் கடிதம்
Recommended image2
அடுத்த 5 நாட்கள்! தமிழ்நாட்டை நோக்கி வரும் பேராபத்து? சென்னையில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! வெதர்மேன் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved