- Home
- Tamil Nadu News
- என் சாவுக்கு இவங்க இரண்டு பேரு தான் காரணம்! மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி டிஜிபிக்கு பகீர் கடிதம்
என் சாவுக்கு இவங்க இரண்டு பேரு தான் காரணம்! மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி டிஜிபிக்கு பகீர் கடிதம்
செங்கல்பட்டு அருகே மருத்துவ விடுப்பு நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த அரசு பேருந்து ஊழியர் யுவராஜ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு உயர் அதிகாரிகளே காரணம் என தற்கொலைக்கு முன் டிஜிபி அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தாம்பரம் மாநகரப் போக்குவரத்து பணிமனை கழகத்தில் JEஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கழுத்து வலி காரணமாக பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தாம்பரம் பணிமனை கிளை மேலாளருக்கு மருத்துவ சான்றிதழ் அனுப்பி மருத்துவ விடுப்பு கேட்டு பலமுறை விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் AE கோவிந்தராஜ் என்பவர் யுவராஜ் விடுப்பை நிராகரித்து விட்டு அவர் அனுப்பிய மருத்துவ சான்றிதழ்களை திரும்ப அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் யுவராஜ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மருத்துவ சான்றிதழ்களை மற்றொரு உயர் அதிகாரியான எஸ்ஆர்டி என்ற சொர்ணலதா என்பவருக்கு அனுப்பி உள்ளார். அவரும் யுவராஜ் விடுப்பை நிராகரித்துவிட்டு ஏன் வேலைக்கு வரவில்லை என கண்டித்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் அவர் மீண்டும் பணிக்கு வரக்கூடாது என்பதற்காக 11G என்ற ஆர்டரையும் போட்டுள்ளார். மேலும் கடந்த மூன்று மாதங்களாக யுவராஜிக்கு பணியை வழங்காமலும் அதே நேரத்தில் ஊதியம் இல்லாமல் குடும்பமே அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ காப்பீட்டு நிதியை வழங்காமல் தொடர்ந்து நிராகரித்துவிட்டு இனிமேல் பணிக்கு வரவேண்டாம் கூறியதால் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மறைமலைநகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு டிஜிபி அலுவலகத்தில் ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் எனது சாவுக்கு காரணம் உயர் அதிகாரிகளின் சொர்ணலதா மற்றும் AE கோவிந்தராஜ் இருவரும் காரணம் என்று குறிப்பிட்டு டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார். அது மட்டும் இல்லாமல் என் தற்கொலைக்குப் பிறகு எனக்கு வர வேண்டிய அனைத்தையும் என் குடும்பத்திற்கு பெற்றுத் தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.