MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • உஷார் மக்களே! தப்பி தவறிகூட வெளியே போயிடாதீங்க! 11 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகும் மழை

உஷார் மக்களே! தப்பி தவறிகூட வெளியே போயிடாதீங்க! 11 மாவட்டங்களில் பதம் பார்க்கப்போகும் மழை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் புதிதாக உருவாகக்கூடிய மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு. இதன் காரணமாக, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 18 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காற்றழுத்த தாழ்வு பகுதி
Image Credit : Google

காற்றழுத்த தாழ்வு பகுதி

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். வருகின்ற 22-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கனமழை பெய்ய வாய்ப்பு
Image Credit : Google

கனமழை பெய்ய வாய்ப்பு

இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

34
சென்னையில் மழை
Image Credit : Google

சென்னையில் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

44
11 மாவட்டங்களில் கனமழை வார்னிங்
Image Credit : our own

11 மாவட்டங்களில் கனமழை வார்னிங்

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (அதாவது 1 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஒரே தேசம் ஒரே ஆட்சி மாநில அரசுகளே கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம் ! திருமாவளவன் அதிரடி
Recommended image2
Now Playing
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பார்க்கணும் ! - கேரளாவில் நவராத்திரி விழாவுக்கு வரும் மக்கள் கருத்து !
Recommended image3
Now Playing
மாற்றுத்திறனாளிகள் தின விழா : காட்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கிய விஜய் பாலாஜி!
Related Stories
Recommended image1
தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் பல மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
வேளாண் பட்டம், பட்டயம் பெற்ற மாணவர்களுக்கு குட்நியூஸ்.. அமைச்சர் வெளியிட்ட அல்டிமேட் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved