- Home
- Tamil Nadu News
- அடுத்த 5 நாட்கள்! தமிழ்நாட்டை நோக்கி வரும் பேராபத்து? சென்னையில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! வெதர்மேன் அப்டேட்
அடுத்த 5 நாட்கள்! தமிழ்நாட்டை நோக்கி வரும் பேராபத்து? சென்னையில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்! வெதர்மேன் அப்டேட்
குமரிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்வதால், தென் தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். சென்னை மற்றும் உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்றும் நாளையும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும் போது, ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டுள்ளதால் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று காலை சென்னையில் சூரியன் தெரிந்தாலும், மழை மேகங்கள் வேகமாக நகர்ந்து வருகிறது. சென்னைக்கு வடக்கிலும், தெற்கிலும் மழை மேகங்கள் வட்டமடிக்க தொடங்கியுள்ளது. இன்று மட்டும் 20 முதல் 40 மி.மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று இரவு முதல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் மழை அதிகரிக்கும். டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு நகரும் போது, தென் தமிழகத்தில் மிக கனமழை ஏற்படும். தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.
இன்றும் நாளையும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மேற்கு நோக்கி நகரும் போது, ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டுள்ளதால் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, குமரி மற்றும் நெல்லை ஆகியவை கனமழை இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போது குமரி கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலுக்கு நகர்ந்ததும், அடுத்த 5 நாட்களுக்கு பிறகு (சக்கரம்) புயல் சின்னம் வங்க கடலில் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த புயல் உருவானால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து அடுத்த சில நாட்களில் தெளிவு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.