புதுசு கண்ணா புதுசு.! டோட்டலா மாறுது டாஸ்மாக் .! வெளியானது வழிகாட்டு நெறிமுறை- குடிமகன்கள் குஷி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையானது ஒவ்வொரு நாளும் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், குடிமகன்களிடம் இருந்து கள்ளத்தனமாக பறிக்கப்படும் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் தடுக்க புதிய திட்டம் அறிமுகம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அட்ஷய பாத்திரம் டாஸ்மாக்
தமிழகத்தில் மதுபான விற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 120 கோடி அளவிற்கும், வருடத்திற்கு 45ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும் மது விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்கள் என்றால் சொல்லவா வேண்டும் ஒரே நாளில் 200 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு நிதியை அள்ளிக்கொடுக்கும் அட்ஷய பாத்திரமாக டாஸ்மாக் உள்ளது.
மதுபான பாட்டில்களுக்கு இனி பில்
இந்தநிலையில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாயும் புல் பாட்டிலுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் வந்தது. மேலும் கள்ளத்தனதமாக மதுபானங்கள் இரவு மற்றும் விடுமுறை காலத்தில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி டாஸ்மாக் மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல்லுக்கு 294 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை வழங்கப்பட்டுள்ளது. அதன் படி மதுபான விற்பனையை கண்காணிக்கும் வகையில் மதுபான விற்பனைக்கு பில் வழங்கப்படவுள்ளது
TASMAC
வழிகாட்டி நெறிமுறை வெளியீடு
இதற்கான பரிசோதனை ராமநாதபுரம் மற்றும் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிமுகம் ஆகவுள்ளது. இந்தநிலையில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுவது முதல் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்வது வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளிலும் தொழில்நுட்பத்தின் மூலமாக தீர்வுகள் மேற்கொள்வதால் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.
tasmac
டாஸ்மாக்கில் பயன்படுத்தும் கருவிகள்
இக்கருவினை பயன்படுத்தி மதுபான பெட்டிகளில் உள்ள QR Code மற்றும் மதுபான புட்டிகளின் லேபிளில் உள்ள QR Code-em Scan செய்ய வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் தினசரி சராசரி விற்பனை எண்ணிக்கை பொருத்து Handheld Device எண்ணிக்ககை வழங்கப்படும். இக்கருவி Network இருக்கும் பொழுது Online Mode-லும் Network இல்லாத பொழுது Offline Mode லும் செயல்படும். இக்கருவியானது எந்த கடைக்கு வழங்கபடுகிறதோ அந்த கடையில் மட்டுமே பயன்படுத்த இயலும். இதனை கடையின் அமைவிடத்துடன் Geofencing செய்திருப்பதால் கடை சுற்றளவை தவிர்த்து பயன்படுத்த இயலாது.
tasmac price hike
ரசீது வழங்கும் நடைமுறை
இக்கருவியின் மூலம் விற்பனை இரசீது அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். இதனை Bluetooth மூலம் Handheld Device இணைத்து பயன்படுத்த வேண்டும். இக்கருவியில் பயன்படுத்தப்படும் பொருட்டு இரசீது தாள் (I'aper Roll) உருண்டை வழங்கப்படும். Handheld Device-mய ஒருமுறை Charge செய்தால் 8 மணி நேரம் உபயோகிக்கலாம். தினசரி பணிமுடிந்த பிறகு மேற்படி கருவியை அணைத்து (Switch off) செய்துப் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.
tasmac
மதுபான விற்பனை வழிமுறை
கடைக்கு உரிய பயனர் பெயர் (Username)மற்றும் கடவுச்சொல் (Password)யை பயன்படுத்தி Handling Device ல் உள்நுழைவு (Login) செய்ய வேண்டும். உள்நுழைவு செய்த பிறகு சில்லறை விற்பனை (Retail Sales) என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, ஸ்கேன் ஹோலோகிராம் (Scan Hologram என்பதை தேர்வு செய்தும் விற்பனை செய்ய படவுள்ள மதுபான புட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் QR Code-னை ஸ்கேன் செய்து Generate Bill Option-யை தேர்வு செய்ய வேண்டும்.ஒன்றுக்கும் மேற்பட்ட புட்டிகள் கேட்கும் போது தொடர்ந்து ஒவ்வொரு புட்டியாக ஸ்கேன் செய்ய வேண்டும்.
Liquor bill kar
பில் வழங்குவது எப்படி.?
அதன் பிறகு Payment Option யை தேர்வு செய்ய வேண்டும். அதாவது Cash Payment. UPI Payment, Card Payment இவற்றில் எது ஒன்று தேவையோ அதனை தேர்வு செய்து Proceed Option-யை தேர்வு செய்ய வேண்டும். Proceed செய்த பிறகு இரசீது அச்சிடு (Print Option) யை தேர்வு செய்ய வேண்டும். Handheld Device மூலம் ஒவ்வொரு மதுபான பெட்டிகளிலும் விற்பனை செய்யப்பட்ட விவரமும். மீதமுள்ள புட்டிகளின் விவரமும் அறிந்து கொள்ளலாம்.
liqour bill
இனி கள்ளத்தனமாக மது விற்கமுடியாது
விற்பனை நேரம் (இரவு 10.00 மணி) முடித்த பிறகு Handheld Device do Sync Updated Stock என்ற Option யை தேர்வு செய்ய வேண்டும். இதனை தினசரி கட்டாயமாக செய்ய வேண்டும். மேற்படி பணிகள் முடிந்த பிறகு Handheld Devices Logout செய்து அணைத்து (Switch off செய்து) பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டும். மேற்படி கருவியினை பயன்படுத்தி நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.