- Home
- Tamil Nadu News
- பிப்ரவரி 5ம் தேதி வரை.. வெளுத்து வாங்கப்போகுதா மழை? அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்!
பிப்ரவரி 5ம் தேதி வரை.. வெளுத்து வாங்கப்போகுதா மழை? அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்!
Rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

மழை குறித்து முக்கிய அப்டேட்
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதலே பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகளின் நீர்மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. வரும் நாட்களில் மழை எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வந்தனர். ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனையடுத்து ஜனவரி மாதம் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதை அடுத்து கடும் பனிபொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக வாகன ஓட்டிகள் அதிகாலை நேரத்தில் செல்லும் போது முகப்பு விளக்கை ஏறியவிட்டவாரே செல்கின்றனர். இந்நிலையில் பனிபொழிவு மற்றும் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
தெற்கு கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை
அதேபோல் நாளை தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 05
தென் தமிழகம் வடதமிழகம் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 06ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

