- Home
- Tamil Nadu News
- Power Cut: மோட்டர் போட்டு வச்சுக்கோங்க! இன்னும் சற்று நேரத்தில் எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
Power Cut: மோட்டர் போட்டு வச்சுக்கோங்க! இன்னும் சற்று நேரத்தில் எந்தெந்த ஏரியாக்களில் மின்தடை? எத்தனை மணிநேரம்?
தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நெல்லை, திருச்சி, கோவை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லாமலே வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மின்சாரம் இல்லாம் சிறிது நேரம் கூட இருக்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் சிறிது நேரம் கூட பொதுமக்களால் இருக்க முடிவதில்லை.
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி
கோவை
எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மன்னிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள் மற்றும் ஊரைக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
கன்னியாகுமரி
பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை, கிருஷ்ணன்கோவில், எம்எஸ் சாலை, கல்லூரி சாலை, நீதிமன்ற சாலை, கேபி சாலை, கீரிப்பேரி, கடுக்கரை, பூதப்பாண்டி, ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம், என்ஜிஓ காலனி, கடற்கரை சாலை, பல்லம், கோணம் உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் 3 மணி வரை பவர் கட் செய்யப்படும்.
கிருஷ்ணகிரி
கரூர்
காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில் பகுதிகளில் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படும்.
கிருஷ்ணகிரி
நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதுகுருக்கி மற்றும் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெரம்பலூர்
பல்லடம்
பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம், மீனாட்சிபுரம், காரையூர், சாலகடை, மணக்கடவு உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் இரவு 11 மணி வரை பவர் கட் செய்யப்படும்.
பெரம்பலூர்
பெரியகருக்கைச்சின்னத்துக்குறிச்சிமேலவல்லம்கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், அய்யூர், வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, பெரியகருக்கை, பெரியாத்தூர், எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.
நெல்லை
TVL டவுன், மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கண்காட்சி மைதானம், TVL டவுன் SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தராதிராஷ்டிரா, பாரதியார் ST, CN கிராமம், கூடங்குளம், இடிந்தகரை, விஜயபதி, ஆவுடையாள்புரம், இருக்கந்துறை, ஸ்ரீ ரெங்க நாராயண புரம், தந்தல், சங்கனேரி, வைரவி கிணறு, தாமஸ் மண்டபம், சாமையர்புரம், பாளையப்பேட்டை, காந்தி நகர், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூர், பேட்டை, தோளிர்பேட்டை, பேட்டை பத்து, அபிசேகப்பட்டி, வையாபுரி நகர் உள்ளிட்ட இடங்களில் 8 மணி நேரம் மின்தடை.
திருச்சி
பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி, சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடு, திருப்பூர், ரெட்டிமாங்குடி, எம்.பாளையம், ஊடத்தூர், நெடுந்தூர், நம்பக்குறிச்சி, நீலுலம், மணியக்குறிச்சி, சாதமங்கலம், புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், கல்லக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாதம்பட்டி, தச்சம்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 வரை மின்தடை செய்யப்படும்.
வேலூர்
உடுமலைப்பேட்டை
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், புச்சிமேடு, மானுபட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பேரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாள் உள்ளிட்ட பகுதிகளில் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.
வேலூர்
ராணிப்பேட்டை, பிஹெச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல், அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம், சாத்துமதுரை, கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம், கிளரசம்பேட்டை, ஜி.ஆர். பெட், பரஞ்சி, குமிணிப்பேட்டை, MRF கம்பெனி, தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

