- Home
- Tamil Nadu News
- Holiday: பிப்ரவரியில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா.!! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியா.?
Holiday: பிப்ரவரியில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா.!! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியா.?
ஜனவரி மாதம் அரையாண்டு, பொங்கல், குடியரசு தினம் என பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்த கொண்டாட்டம் பிப்ரவரி மாதத்தில் நீடிக்குமா?

விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான்
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற வார்த்தையை கேட்டாலே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் குஷியில் துள்ளிக்குதிப்பார்கள். இந்நிலையில் ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு விடுமுறை கொட்டி கிடந்தது.
அரையாண்டு தேர்வு விடுமுறை
அதாவது அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் இம்முறை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை கிடைத்தது. இதில், ஜனவரியில் 4 நாட்கள் விடுமுறை வந்துவிட்டது.
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை
பின்னர் பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது ஜனவரி 15 வியாழக்கிழமை தை பொங்கல், ஜனவரி 16 வெள்ளிக்கிழமை திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 சனிக்கிழமை உழவர் திருநாள், ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வந்தது. மேலும் ஜனவரி 14ம் தேதி புதன் கிழமை போகி பண்டிகைக்கு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
குடியரசு தினம் 3 நாட்கள் விடுமுறை
பொங்கல் முடிந்த கையோடு மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. அதாவது ஜனவரி 24, 25 சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிட்டது. மேலும் ஜனவரி 26ம் தேதி திங்கள் குடியரசு தினம் வந்ததால் தொடர் விடுமுறை கிடத்ததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தினர். மொத்தமாக 31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் பாதிக்கு பாதி அதாவது 15 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
பிப்ரவரி மாதம் விடுமுறை நாட்கள்
இந்நிலையில் ஜனவரி மாதம் பிப்ரவரி மாதமும் அமையுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம். அதாவது பிப்ரவரி 1ம் தேதி சைப்பூசம் அரசு விடுமுறையாகும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்தனர். பிப்ரவரியில் வேறு எந்த அரசு விடுமுறையும் இல்லை. வார விடுமுறை என மொத்தமாக பார்த்தால் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

