MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • H.ராஜாவுக்கு பக்கவாதம்! முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர்! வெளியான தகவல்

H.ராஜாவுக்கு பக்கவாதம்! முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர்! வெளியான தகவல்

பாஜக தலைவர் எச்.ராஜா மேடையிலேயே மயங்கி விழுந்தார். பக்கவாதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு திமுக மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 01 2026, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி
Image Credit : our own

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய Tamil Nadu Summit நிகழ்ச்சியில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறுநாள் தொடர்ந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா பங்கேற்றிருந்தார்.

25
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
Image Credit : our own

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென மேடையிலேயே எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி சரிந்து விழுந்தார். அவர் கீழே விழப்போன நிலையில் மேடையில் இருந்தவர்கள் அவரை சுதாரித்துப் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. 

Related Articles

Related image1
மத்திய பட்ஜெட் அதுவுமா பொதுமக்கள் தலையில் இடியை இறக்கிய எண்ணெய் நிறுவனங்கள்! சிலிண்டர் விலை உயர்வு!
Related image2
நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்.. என்ன காரணம்? பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
35
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
Image Credit : Asianet News

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

பின்னர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டது மட்டுமல்லாமல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நலம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.

45
எச்.ராஜாவுக்கு பக்கவாதம்
Image Credit : Asianet News

எச்.ராஜாவுக்கு பக்கவாதம்

இந்நிலையில் எச்.ராஜா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பக்கவாத பாதிப்பு (Stroke) காரணமாக அனுமதிக்கப்பட்ட எச். ராஜா உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் தற்போது சிகிச்சைக்கு ஒத்துழைத்து, நன்கு தேறி வருகிறார். தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் பேசக்கூடிய நிலையில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
எச்.ராஜா உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர்
Image Credit : Asianet News

எச்.ராஜா உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு முதலுதவி அளித்தது திமுகவை சேர்ந்த மருத்துவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமான சூழ்நிலையில் இருந்த பாஜக எச்.ராஜாவிற்கு உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்க முடிவு எடுத்து உயிரை காப்பாற்றிய திமுக டாக்டர் ஹபிசுல்லாஹ் காப்பாற்றியது தெரியவந்தது. குறிப்பாக Golden hour ட்ரீட்மெண்ட் என்பது உடலுக்கு ஆபத்து ஏற்பட்ட அந்த முதல் சில மணி நிமிடங்கள் கொடுக்கும் அதிதீவிர சிகிச்சை. அதை ராஜாவுக்கு கிடைக்க வேண்டும் என்று போராடியவர் ஹபிசுல்லாஹ் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எச். ராஜா
அரசியல்
பிஜேபி
அப்போலோ மருத்துவமனை
திமுக

Latest Videos
Budget 2026 : SIP Calculator
Monthly Investment
₹
Expected Annual Return
%
Investment Duration
Yr
Recommended Stories
Recommended image1
மத்திய பட்ஜெட் அதுவுமா பொதுமக்கள் தலையில் இடியை இறக்கிய எண்ணெய் நிறுவனங்கள்! சிலிண்டர் விலை உயர்வு!
Recommended image2
எல்லாமே ஏமாற்று வேலை தானா..? ஜனவரியில் ஓய்வு பெற்ற 5000 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எங்கே? அன்புமணி கேள்வி
Recommended image3
நம் தேசத்திற்கு எதிரானவர் உதயநிதி..! பியூஸ் கோயல் கடும் குற்றச்சாட்டு
Related Stories
Recommended image1
மத்திய பட்ஜெட் அதுவுமா பொதுமக்கள் தலையில் இடியை இறக்கிய எண்ணெய் நிறுவனங்கள்! சிலிண்டர் விலை உயர்வு!
Recommended image2
நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்.. என்ன காரணம்? பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved