- Home
- Tamil Nadu News
- பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ரூ.1,000-க்கு பதில் 2,000? 2 நாளில் அறிவிப்பு.. அமைச்சர் குட்நியூஸ்!
பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ரூ.1,000-க்கு பதில் 2,000? 2 நாளில் அறிவிப்பு.. அமைச்சர் குட்நியூஸ்!
சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற கையில் வைத்துள்ள முக்கியமான ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதை வைத்தே பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தின்போது புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பொங்கல் பரிசு
இதன்மூலம் இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,30,69,831 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், பெண்களின் வாக்குகளை ஒன்று விடாமல் அள்ளுவதற்காக மகளிர் உரிமைத் தொகையை உயர்த்த திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி பொங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்
அதாவது பெண்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ''பொங்கல் அன்றோ அல்லது பொங்கல் முடிவதற்குள்ளோ பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தித்திப்பான செய்தியை அறிவிப்பார். பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகையை அரசு உயர்த்த முடிவு செய்துள்ளதையே பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என அமைச்சர் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளிர் உரிமைத்தொகை உயருகிறதா?
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற கையில் வைத்துள்ள முக்கியமான ஆயுதம் மகளிர் உரிமைத் தொகை. இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதை வைத்தே பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.
இதனால் மகளிர் உரிமைத்தொகையை 1000 ரூபாயில் 1,500 ரூபாயாகவோ அல்லது 2,000 ரூபாயாகவோ அதிகரிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தான் பொங்கல் பரிசு என அமைச்சர் ஐ.பெரியசாமி சூசமாக கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
