- Home
- Business
- பெண்களுக்கு இனி ரூ.1,000 மிஸ் ஆகாது.. விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற சூப்பர் சான்ஸ்!
பெண்களுக்கு இனி ரூ.1,000 மிஸ் ஆகாது.. விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற சூப்பர் சான்ஸ்!
Kalaingar Magalir Urimai Thogai: தமிழகத்தில் விடுபட்ட பெண்களும் மகளிர் உரிமைத்தொகை பெற சூப்பர் சான்ஸ் வந்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ரேஷன் கார்டு வைத்துள்ள மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த 1,000 ரூபாய் தகுதியான பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
அதாவது 2வது கட்டமாக புதிதாக 16,94,339 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 1,30,69,831 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
விடுபட்டவர்களும் உரிமைத்தொகை பெற சூப்பர் சான்ஸ்
இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்த பெண்களில் பலரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவர்கள் தங்களுக்கு மாதம் ரூ.1,000 கிடைக்காதா? என கவலையில் மூழ்கிய நிலையில், அவர்களுக்கு தமிழக அரசு குட்நியூஸ் சொல்லியுள்ளது.
அதாவது மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்து நிராகரிப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். அவர்களின் விண்ணப்பம் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என தமிழக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் யுக்தி
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகளிர் உரிமைத்தொகையை தேர்தல் ஆயுதமாக பயன்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெண்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நிலையில், விடுப்பட்டவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்து அவர்களின் வாக்குகளை அள்ள திமுக முடிவு செய்துள்ளது.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,500 ஆக உயர்த்தலாமா? என்பது குறித்தும் திமுக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

