- Home
- Tamil Nadu News
- அடுத்த 2 நாள் தமிழகத்தை டார்கெட் செய்யும் கன மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன செம அப்டேட்
அடுத்த 2 நாள் தமிழகத்தை டார்கெட் செய்யும் கன மழை.! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன செம அப்டேட்
Tamil Nadu Weatherman : சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானும் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் மழை கொட்டியது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இன்று (4ம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழகத்தில் பல்வேறு மாவடங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை சுற்றியுள்ள மழை பெய்தது.
இது தொடர்பான தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டிற்கு இடியுடன் கூடிய மழைபெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று மற்றும் நாளை மழை தொடரும் எனவும் சென்னையிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான சூழ்நிலை உள்ளதாகவும், இன்றைய தினமும் மழை தொடரும் என தெரிவித்துள்ளார்.
வட கடலோர தமிழ்நாடு - KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு & சென்னை), பாண்டி மற்றும் கடலூர் - தற்போது உள் மாவட்டங்களில் குவிந்துள்ள பகுதி இன்றிரவுக்குள் கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு-காலை மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
தெற்கு தமிழ்நாடு - தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி
மேற்கு உள்துறை தமிழ்நாடு - சேலம், நாமக்கல், கரூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல்
டெல்டா பகுதி - திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர்
வடக்கு உள்துறை TN - திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மேலே உள்ள அனைத்து இடங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.