- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி! உடனே 80% முன் பணம்.! அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி! உடனே 80% முன் பணம்.! அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
தரமான எண்ணெய் விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு கொள்முதல் விலையை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், சந்தை விலையை விட 80% அதிக விலையில் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் லாபம் உறுதி செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் நலனை முன்னிட்டு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், 2024–25 ஆம் ஆண்டுக்கான உழவர் நலத்துறையின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தரமான எண்ணெய் விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக சிறப்பு கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், உழவர்கள் உற்பத்தி செய்யும் பாசன ஆதாரப் பயிர்களுக்கு சிறப்பு நன்மை வழங்கப்படுகிறது. குறிப்பாக, தரமான எண்ணெய் விதைகளுக்கான விலை சந்தை விலையை விட 80% அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் நஷ்டம் இல்லாமல், நியாயமான விலைக்கு தங்கள் உற்பத்தியை விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
விதை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட விதைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 80% முன்பணம் வழங்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள தானியக் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நியாய விலைக் கடைகள் மூலமாகவும், சென்னை மற்றும் மாவட்ட அளவிலான நியாய விலைக் கடை சங்கங்கள் வழியாகவும் கொள்முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசன வழி உழவுப் பயிர்கள்:
நிலம் ஒன்றுக்கு 5 குவிண்டால் வரை மட்டுமே சிறப்பு விலையில் கொள்முதல் செய்யப்படும்.
மழை சார்ந்த நிலங்களுக்கு 12.5 குவிண்டால் வரை விதை கொள்முதல் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.
பாசன வசதி உடைய உழவர்கள்:
நெல் - ஆண்டுக்கு 5 ஏக்கர் விதைப்பண்ணை
பிறபயிர்கள் - ஆண்டுக்கு 12.5 ஏக்கர் விதைப்பண்ணை.
விவசாயிகளுக்கான கூடுதல் நன்மைகள்:
சிறப்பு விலையில் எண்ணெய் விதைகள் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் சந்தை விலை ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.
உற்பத்தி அதிகரிக்க விளைச்சல் விலை உறுதிப்படுத்தப்படும்.
இதன் மூலம், தமிழ்நாட்டின் எண்ணெய் விதை உற்பத்தி செய்பவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் உழைத்து, அதிக லாபம் பெறுவார்கள். இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் உழவர் நலத்துறை மற்றும் தமிழக அரசு விவசாயிகளுக்கு வலுவான ஆதரவாக உள்ளது.