ஆகஸ்டில் தமிழகத்திற்கு காத்திருக்கும் ஆபத்து.! வெதர்மேன் அலர்ட் ரிப்போர்ட்
ஆகஸ்ட் 2 முதல் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் மழையானது வரலாற்று சாதனை படைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கன மழை
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஒரு சில மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில், பல மாவட்டங்களில் வெயில் குறைந்து லேசான மழை மற்றும் காற்று வீசி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால், பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் - வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை
ஆகஸ்ட் 3 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுள்ளது. இதே போல ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் மழையானது வெளுத்து வாங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களும் தென் மாவட்டங்களான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட்டில் தமிழகத்தில் கன மழை
இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மத்தியில் தான் தொடங்கும். தற்போது தென்மேற்கு பருவமழை கேரளா உள்ளிட்ட மாநில்ங்களில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் மழையானது ஆகஸ்ட் மாதம் வெளுத்து வாங்க உள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் மழையானது வரலாற்று சாதனை படைக்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்னும் 2 நாட்கள் உள்ளன - தமிழக உள் மாவட்டங்களுக்கு தேவையான மழை பெய்ய நேரம். பல மாவட்டங்களுக்கு சிறந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாக இது அமையப் போகிறது என பதிவிட்டுள்ளார்.
ஆகஸ்ட்- மழை சாதனையை முறியடிக்கும்
மற்றொரு பதிவில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் இதை எத்தனை முறை பார்க்கிறோம். ஆகஸ்டு தொடக்கத்தில் குறைந்த அழுத்தம் தமிழக கடற்கரையில் உருவாகிறது அரிது என தெரிவித்துள்ளார். 2025 ல் நாம் பெறப்போகும் சிறப்பான ஆகஸ்ட். தமிழகத்திற்கு சாதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.