- Home
- Tamil Nadu News
- Rain: 1 வாரம் தெறிக்க விடப் போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? சென்னையில் எப்படி? வானிலை அப்டேட் இதோ!
Rain: 1 வாரம் தெறிக்க விடப் போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்கள்? சென்னையில் எப்படி? வானிலை அப்டேட் இதோ!
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எங்கெங்கு மழை பெய்யும்? சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா? என்பது குறித்து பார்ப்போம்.

Tamil Nadu Weather Update
தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யக்கூடும் சென்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 21ம் தேதி (இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஒரு வாரத்துக்கு மழை பெய்யும்
22ம் தேதி முதல் 24ம் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழை பெய்யுமா?
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை எங்கே?
கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
அதிகப்பட்சமாக லால்பேட்டை (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது. மணல்மேடு (மயிலாடுதுறை), சீர்காழி (மயிலாடுதுறை) தலா 5 செ.மீட்டரும், கே.எம்.கோயில் (கடலூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை) தலா 4 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளன.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
21ம் தேதி முதல் 25ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.