- Home
- Tamil Nadu News
- இலவசமாக காய்ச்சிய பால்.! கோயில்களுக்கு வரும் குழந்தைகளுக்கு - தமிழக அரசின் அசத்தல் திட்டம் அறிமுகம்
இலவசமாக காய்ச்சிய பால்.! கோயில்களுக்கு வரும் குழந்தைகளுக்கு - தமிழக அரசின் அசத்தல் திட்டம் அறிமுகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இத்திட்டம் 10 திருக்கோயில்களில் செயல்படுத்தப்படும்.

கோயிலில் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால்
தூத்துக்குடி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2025 2026 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது,
"சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு 10 திருக்கோயில்களில் தினசரி காய்ச்சிய பால் வழங்கப்படும் என அறிவித்தோம். அதனை இன்று காலை திருச்செந்தூரில் தொடங்கி வைத்தோம். இத்திட்டமானது திருச்செந்தூர். அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவரங்கம்,
குழந்தைகளுக்கு பால்- 10 கோயிலில் அறிமுகம்
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், பண்ணாரி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் இன்று முதல் செயல்படுத்தப்பட்டு, காய்ச்சிய பால் வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் - பக்தர்கள் வரவேற்பு
இதற்கான செலவு ரூ. 50 இலட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது தரிசனத்திற்கு வரிசையில் காத்திருக்கும் பச்சிளம் குழந்தைகளின் பெற்றோருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் பேருதவியாக இருக்கும். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் திருக்கோயிலில் அனைத்து பக்தர்களும் தெரிவித்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் பக்தர்களுக்கு இதுபோன்ற நலப்பணிகளையும், வசதிகளையும் தொடர்ந்து செய்து தருவதற்கு ஓர் ஊக்கமாக இருக்கின்றது என தெரிவித்தார்.
திருச்செந்தூர் திருக்கோயிலின் குடமுழுக்கு
தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற 07.07.2025 அன்று நடைபெற உள்ள திருச்செந்தூர் திருக்கோயிலின் குடமுழுக்கில் இலட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். அதற்கு தகுந்தாற்போல பக்தர்களுக்கு தேவையான உணவு வசதிகள், குடிநீர் மற்றும்கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதி போன்ற வசதிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தோம். திருக்கோயிலுக்கு வருகின்ற சாலைகளில் இருக்கின்ற பழுதுகளை குடமுழுக்கிற்கு முன்னதாகவே சரிசெய்திடவும்,
திருச்செந்தூர் திருக்கோயிலின் குடமுழுக்கு திட்டங்கள்
தேவைப்படும் இடங்களில் புதிய சாலைகள் அமைப்பதற்கும் நெடுஞ்சாலைத்துறையினர் உறுதியளித்துள்ளனர். திருக்கோயிலில் குடமுழுக்கிற்கு முன் மற்றும் பின் முடிக்கப்பட வேண்டிய பணிகள் எவை எவையென பட்டியலிட்டு மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக திருக்கோயிலுக்கு வருகின்ற பாதைகளில் நடைபெறுகின்ற பணிகள் குடமுழுக்கிற்கு முன் முழுமையாக நிறைவு செய்யப்படும் என கூறினார்.