- Home
- Tamil Nadu News
- 11 நாட்கள் காலாண்டு விடுமுறை..! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி..! தேர்வு அட்டவணையும் வெளியீடு!
11 நாட்கள் காலாண்டு விடுமுறை..! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி..! தேர்வு அட்டவணையும் வெளியீடு!
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் காலாண்டு தேர்வு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN School Quarterly Exams & Holiday Schedule 2025
தமிழக பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரகம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் இணைந்து அறிவித்துள்ள தகவலின் படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வுகள் நடைபெறவுள்ளன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் தனித்தனி நாள்களில் நடைபெற உள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும். இதே தேதிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
அதே வேளையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்வுகள் முன்னதாகவே தொடங்குகின்றன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25 வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் காலை நேரங்களில் நடத்தப்படுகின்றன; பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வுகள் மதிய வேளையில் நடைபெறும்.
11 நாட்கள் காலாண்டு விடுமுறை
தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இதன்படி, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் 1 அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தி ஆகியவை வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்
காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டது மாணவர்களுக்கு கசப்பாக இருந்தாலும், காலாண்டு விடுமுறை 11 நாட்கள் வருவதால் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாட்டத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.