- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500! தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்! முழு விவரம்!
பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500! தமிழ்நாடு அரசு சொன்ன குட் நியூஸ்! முழு விவரம்!
தமிழ்நாடு அரசு திறனாய்வுத் தேர்வு மூலம் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்க உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Tamilnadu Government School Scheme
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக தமிழ்மொழி திறனாய்வுத்தேர்வு (Tamil Talent Exam), தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (Chief minister talent exam) என்ற 2 சிறப்பு தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்நிலையில், 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி மாணவ, மாணவியர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" நடத்தப்பட்டு வருகிறது.
2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான "தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு" 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.
தேர்வு எப்படி இருக்கும்?
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் உள்ள ஏழு(7) இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத "இயல் 2-ல் உள்ள மேகம், பிரும்மம்; இயல் 6-ல் முத்தொள்ளாயிரம்; மற்றும் இயல் 7-ல் அக்கறை" ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
2025-2026-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் (மெட்ரிக்/CBSE / ICSE / உட்பட) மாணவர்கள், 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.h என்ற இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரைடபதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் / முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். 04.09.2025 என்று கூறப்பட்டுள்ளது.