- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! முழு விவரம் இதோ!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! முழு விவரம் இதோ!
TN School Holiday: தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கும், ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இந்நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை (22.10.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.
கடலூர், செங்கல்பட்டில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை
அதே வேளையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக கடலூரில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வெளியிட்டுள்ளார். இதேபோல் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ளார்.
மேலும் 6 மாவட்டங்களுக்கும் விடுமுறை
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் நாளை தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே தீபாவளி காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை கிடைத்தது. இப்போது மழை காரணமாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.