கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை (22.10.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.

கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இதேபோல், கனமழை காரணமாக கடலூரில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.