அரசு விடுமுறை அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் திட்டமிடப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்த மின்தடை வாபஸ்.

இன்று அரசு விடுமுறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இன்று எந்த பகுதிகளிலும் மின்தடை இல்லை
ஆனால் தீபாவளி மறுநாள் அதாவது இன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மின்தடை தொடர்பான அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. ஆகையால் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்த பகுதியில் இன்று மின்தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.