- Home
- Tamil Nadu News
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு எப்போது? அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் MBBS, BDS மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 முதல் தொடங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். கவுன்சிலிங்
தமிழ்நாட்டில் இளங்கலை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பரிசீலனையில், 20 விண்ணப்பங்கள் போலிச் சான்றிதழ்களுடன் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான கலந்தாய்வு தடை செய்யப்பட்டுள்ளது எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதுகுறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் இளங்கலை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 5-ஆம் தேதியிலிருந்து ஜூன் 29-ஆம் தேதி வரை பெறப்பட்டன. மொத்தம் 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒருசில விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க சில மாணவர்கள் மறந்துவிட்டனர். அவர்களுக்காக 2 நாள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த 2 நாளில் சான்றிதழ்களை இணைத்து மீண்டும் தந்தால், அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதிப் பட்டியலில் சேர்க்கப்படும்.
போலிச் சான்றிதழ்கள்
இதற்கிடையே, 20 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் போலிச் சான்றிதழ்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 20 மாணவர்களுக்கும் கலந்தாய்வில் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது. மேலும், 3 வருடங்களுக்கு இவர்கள் தமிழ்நாடு மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்த 20 மாணவர்களில், 7 மாணவர்கள் பிறப்பிடச் சான்றிதழைப் போலியாகத் தந்துள்ளனர். 9 பேர் சாதிச் சான்றிதழைப் போலியாகத் தந்துள்ளனர். 4 பேர் என்.ஆர்.ஐ. தகுதிக்கான தூதரகச் சான்றிதழைப் போலியாகத் தந்துள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பதற்கான இறுதி நாள் அக்டோபர் 18, 2025 காலை 10 மணி வரை ஆகும்.
மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தேதிகள்
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை முடிந்து, இறுதிப் பட்டியல் வருகிற ஜூலை 25, 2025 காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
தகுதிப் பட்டியல் (மெரிட் ரிசல்ட்) ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு, மத்திய அரசின் கால அட்டவணைப்படி தமிழ்நாட்டில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 30, 2025 காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கப்பட இருக்கிறது."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். போலிச் சான்றிதழ்கள் மூலம் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த கடுமையான நடவடிக்கை,