- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் 1 வாரம் போட்டுத் தாக்கப்போகும் கனமழை..! எந்தெந்த மாவட்டங்கள்.. வானிலை அப்டேட்!
தமிழகத்தில் 1 வாரம் போட்டுத் தாக்கப்போகும் கனமழை..! எந்தெந்த மாவட்டங்கள்.. வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று முதல் 1 வாரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 1 வாரம் கனமழை
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரளவு நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் இன்று முதல் அக்டோபர் 18ம் தேதி வரை 7 செமீ முதல் 11 செமீ வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
அக்டோபர் 13 வரை தென் இந்தியா முழுவதும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், தெற்கு உள் கர்நாடகம், கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனம், கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று எங்கெங்கு மழை பெய்யும்?
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கோவை, ஈரோடு
நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, தென்காசி
இதேபோல் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 15-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,. இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.